St. Philip Benizi Queenship of BVM St. Symphorian

ஆகஸ்டு 22

அன்னை கன்னி மரியா விண்ணக அரசி

mary

அன்னை கன்னி மரியா விண்ணக அரசி

திருவிழா : ஆகஸ்ட் 22

விண்ணக அரசி (ஆங்கிலம்: Queen of Heaven) என்பது தூய கன்னி மரியாவுக்கு கிறித்தவர்களால் குறிப்பாக கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஒரு சில ஆங்கிலிக்கம், கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் வழங்கப்படும் பட்டமாகும். 5ஆம் நூற்றாண்டில் நடந்த முதலாம் எபேசு பொதுச்சங்கத்தில் மரியா கடவுளின் அன்னை (theotokos) என அறிவிக்கப்பட்டதின் விளைவாக இப்பட்டம் வழங்கப்படலாயிற்று என நம்பப்படுகின்றது.

இந்த நம்பிக்கை குறித்த கத்தோலிக்க படிப்பினை திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸின் Ad Caeli Reginam என்னும் சுற்று மடலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மரியா விண்ணக அரசி என அழைக்கப்படுவதற்கு காரணம், இயேசு கிறித்து விண்ணக அரசராக இருப்பதுவே ஆகும். இது பண்டைய இசுரயேல் அரச வழக்கம் என்பது குறிக்கத்தக்கது.

திருச்சபையினால் அதிகாரப்பூவ அனுமதி பெறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விண்ணக அரசி என்னும் பட்டம் கத்தோலிக்க மரபிலும், வேண்டுதல்களிலும், பக்தி முயற்சிகளிலும், கலையிலும் முக்கிய பங்கு வகிக்கித்து வந்தது.

 

image