Bl. Ladisla Of Gielniow St. Sergius Of Radonezh
Saints Louis Martin & Marie-Zélie Guérin

செப்டம்பர் 25

J}a

mary

✠ புனிதர்கள் லூயிஸ் மார்ட்டின் மற்றும் மேரி செலின் குரின் ✠
(Saints Louis Martin and Marie-Zélie Guérin)

✠பொதுநிலையினர் : (Laypeople)

புனிதர்கள் "லூயிஸ் மார்ட்டின்" (Louis Martin) மற்றும் "மேரி செலின் குரின்" (Marie-Azélie Guérin) ஆகிய இருவரும் திருமணமான ரோமன் கத்தோலிக்க ஃபிரெஞ்ச் பொதுநிலையினரும், "கார்மேல்" (Carmelite nun) சபையின் அருட்சகோதரியான "புனிதர் லிசியே நகரின் தெரெசா" (St. Thérèse of Lisieux) உள்ளிட்ட ஐந்து அருட்சகோதரியினரின் பெற்றோருமாவர். 2015ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 18ம் தேதி, இவர்களிருவரும் திருத்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களால் புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். கத்தோலிக்க திருச்சபையின் சரித்திரத்தில், முதன்முறையாக புனிதர்களான திருமணமான இணை இவர்களாவர்.

✠புனிதர் லூயிஸ் மார்ட்டின்:

✠பிறப்பு : ஆகஸ்ட் 22, 1823
போர்டியூக்ஸ், கிரோன்ட், ஃபிரான்ஸ்
(Bordeaux, Gironde, France)

✠இறப்பு : ஜூலை 29, 1894 (வயது 70)
அர்நீர்ஸ்-சுர்-இடன், யூர், ஃபிரான்ஸ்
(Arnières-sur-Iton, Eure, France)

✠முக்திபேறு பட்டம் : அக்டோபர் 19, 2008
திருத்தந்தை 16ம் பெனடிட்
(Pope Benedict XVI)

புனிதர் பட்டம் : அக்டோபர் 18, 2015
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

✠நினைவுத் திருவிழா : செப்டம்பர் 25

✠பாதுகாவல் : குடும்பம், தந்தை

"லூயிஸ் ஜோசஃப் அலாய்ஸ் ஸ்டனிஸ்லாஸ் மார்ட்டின்" (Louis Joseph Aloys Stanislaus Martin) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1823ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் "போர்டியூக்ஸ்" (Bordeaux) எனுமிடத்தில் பிறந்தவர் ஆவார். "பியர்ரெ-ஃபிரான்காய்ஸ் மார்ட்டின்" (Pierre-François Martin) மற்றும் மேரி-ஆன்-ஃபன்னி போரியு" (Marie-Anne-Fanny Boureau) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவர், தமது பெற்றோருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார். இவருடன் பிறந்த சகோதரர்கள் அனைவரும் முப்பது வயதாவதற்கு முன்னமே மரித்துப் போயினர்.

லூயிஸ், "அகுஸ்தீனிய பெரிய புனிதர் பெர்னார்ட்" (Augustinian Great St. Bernard Monastery) துறவு மடத்தில் இணைந்து ஒரு துறவி ஆக விரும்பினார் என்றாலும், இலத்தீன் மொழி கற்று தேற இயலவில்லையாதலால் இவர் நிராகரிக்கப்பட்டார். பின்னர் அவர், கடிகாரம் செய்பவராக ஆனார். அதற்காக "ரென்ஸ்" (Rennes) மற்றும் "ஸ்ட்ராஸ்பேர்க்" (Strasbourg) ஆகிய நகர்களில் கற்று தேறினார்.

=====================

புனிதர் மேரி செலின் குரின்:

✠பிறப்பு : டிசம்பர் 23, 1831
செயின்ட்-டெனிஸ்-சுர்-சர்தொன், ஒர்ன், ஃபிரான்ஸ்
(Saint-Denis-sur-Sarthon, Orne, France)

✠இறப்பு : ஆகஸ்ட் 28, 1877 (aged 45)
அலென்கான், ஒர்ன், ஃபிரான்ஸ்
(Alençon, Orne, France)

✠முக்திபேறு பட்டம் : அக்டோபர் 19, 2008
திருத்தந்தை 16ம் பெனடிட்
(Pope Benedict XVI)

✠புனிதர் பட்டம் : அக்டோபர் 18, 2015
திருத்தந்தை பிரான்சிஸ்
(Pope Francis)

✠நினைவுத் திருவிழா : செப்டம்பர் 25

இவர், "செயின்ட்-டெனிஸ்-சுர்-சர்தொன்" (Saint-Denis-sur-Sarthon) எனும் இடத்திற்கு அருகிலுள்ள "கண்டலெய்ன்" (Gandelain) என்னும் இடத்தில் பிறந்தவர் ஆவார். "இசிதோர் குரின்" (Isidore Guérin) மற்றும் லூயிஸ் ஜீன் மேஸ்" (Louise-Jeanne Macé) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவர் தமது பெற்றோரின் மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஆவார். இவரது தமக்கை "மேரி லூயிஸ்" (Marie-Louise) பின்னாளில் "விசிடேஷன்" சபையின் (Visitandine nun) அருட்சகோதரியானார். இவரது இளைய சகோதரரான "இசிடோர்" (Isidore), ஒரு மருந்தாளுனரானார். தாமும் ஒரு அருட்சகோதரியாக துறவறம் பெற முயன்ற செலின், தமக்கிருந்த சுவாசக்கோளாறுகள் மற்றும் அடிக்கடி தொல்லை தந்த தலைவலி காரணமாக துறவறம் பெற இயலவில்லை. ஆகவே, தமக்கு நிறைய குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனை செபித்தார். ஆக, தமது குழந்தைகளை இறை சேவையில் அர்ப்பணிக்க விரும்பினார். பின்னர், பின்னலாடைகளுக்கான நூல் தயாரிக்கும் தொழில் தொடங்கிய செலின், கி.பி. 1858ம் ஆண்டு மார்ட்டினை சந்தித்து அவருடன் காதலில் வீழ்ந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமண வாழ்க்கை:
அன்பில் இணைந்த இத்தம்பதியினர், ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்தனர். அவர்களில் நால்வர் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். மீதமுள்ள ஐந்து குழந்தைகளும் பிற்காலத்தில் அருட்சகோதரிகளாக மாறினர். இந்த தம்பதியரின் கடைசி குழந்தையாக (ஒன்பதாவது) பிறந்தவர்தான் "புனிதர் லிசியே நகரின் தெரெசா" (St. Thérèse of Lisieux).

இவர்களின் குழந்தைகள் :

1. மேரி லூயிஸ் (Marie Louise) (ஃபெப்ரவரி 22, 1860 - ஜனவரி 19, 1940), அருட்சகோதரி, "லிசியே நகர கார்மல்சபை" (Carmelite at Lisieux)
2. மேரி பவுலின் (Marie Pauline) (செப்டம்பர் 7, 1861 - ஜூலை 28, 1951), அருட்சகோதரி, "லிசியே நகர கார்மல்சபை" (Carmelite at Lisieux)
3. மேரி லியோனி (Marie Léonie) (ஜூன் 3, 1863 - ஜூன் 16, 1941), அருட்சகோதரி, "சேன்" நகர விசிடேஷன் சபை" (Visitandine at Caen)
4. மேரி ஹெலன் (Marie Hélène) (அக்டோபர் 3, 1864 - ஃபெப்ரவரி 22, 1870);
5. ஜோசப் லூயிஸ் (Joseph Louis) (செப்டம்பர் 20, 1866 - ஃபெப்ரவரி 14, 1867);
6. ஜோசப் ஜீன்-பேப்ஸ்ட் (Joseph Jean-Baptiste) (டிசம்பர் 19, 1867 - ஆகஸ்ட் 24, 1868);
7. மேரி செலின் (Marie Céline) (ஏப்ரல் 28, 1869 - ஃபெப்ரவரி 25, 1959), அருட்சகோதரி, "லிசியே நகர கார்மல்சபை" (Carmelite at Lisieux)
8. மேரி மெலனி தெரஸ் (Marie Mélanie-Thérèse) (ஆகஸ்ட் 16, 1870 - அக்டோபர் 8, 1870);
9. மேரி பிரான்கோய்ஸ் தெரஸ் (Marie Françoise-Thérèse) (ஜனவரி 2, 1873 - செப்டம்பர் 30, 1897), அருட்சகோதரி, "லிசியே நகர கார்மல்சபை" (Carmelite at Lisieux), 1925ஆண்டு, புனிதர் பட்டம்.

மரணம் :
செலின், மார்பக புற்றுநோய் காரணமாக, கி.பி. 1877ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 28ம் தேதி, தமது நாற்பத்தைந்து வயதில், தமது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு மரித்துப்போனார். அவர் லூயிஸை மணந்த அதே பேராலயத்தில் அவரது இறுதிச் சடங்கும் நடந்தது. செலின் மறைந்த சில வாரங்களின் பின்னர், லூயிஸ் தமது பின்னலாடை நூல் உற்பத்தி செய்யும் தொழிலையும் வீட்டையும் விற்றுவிட்டு, செலினின் சகோதரன் "இசிடோர் குரின்" (Isidore Guérin) வசித்த "நோர்மண்டி" (Normandy) அருகேயுள்ள "லிசியேக்ஸ்" (Lisieux) நகர் சென்று வசித்தார்.

கி.பி. 1889ம் ஆண்டு, இரண்டு முறை பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட லூயிஸ், இருதய தமனி நாள சுவர்களில் ஏற்பட்ட தடிமன், அடைப்புகள் காரணமாக மூன்று வருடங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 1892ம் ஆண்டு வீடு திரும்பிய இவர், கி.பி. 1894ம் ஆண்டு, ஜூலை மாதம், 29ம் தேதி, தமது 70 வயதில் மரித்தார்.

image