St. Galla St. Maria Faustina Kowalska
St. Raymund Of Capua St. Flora

அக்டோபர் 5

✠ புனிதர் மரியா ஃபவுஸ்டினா ✠

mary

✠ புனிதர் மரியா ஃபவுஸ்டினா ✠
(St. Maria Faustina Kowalska)

கன்னியர், மறைப்பணியாளர், இறைக்காட்சியாளர், “இறை இரக்கத்தின் தூதர்”:
(Virgin, Religious, Christian Mystic, "Apostle of Divine Mercy")

பிறப்பு: ஆகஸ்ட் 25, 1905
குலோகோவிச், ரஷியப் பேரரசு
(Głogowiec, Łęczyca County, Congress Poland)

இறப்பு: அக்டோபர் 5, 1938 (அகவை 33)
க்ராகோவ், போலந்து
(Kraków, Poland)

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 18, 1993
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: ஏப்ரல் 30, 2000
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலங்கள்:
இறை இரக்கத்தின் பேராலயம், க்ராகோவ், போலந்து
(Basilica of Divine Mercy, Kraków, Poland)

நினைவுத் திருவிழா: அக்டோபர் 5

பாதுகாவல்: உலக இளையோர் நாள்

“புனிதர் அர்ச்சிஷ்ட நற்கருணையின் மரிய ஃபவுஸ்டினா கோவால்ஸ்கா” (Saint Maria Faustyna Kowalska of the Blessed Sacrament), போலந்து நாட்டின் “க்ராகோவ்” (Kraków) எனுமிடத்தில் பிறந்த கத்தோலிக்க அருட்சகோதரியும், இறைக்காட்சியாளரும், கத்தோலிக்க திருச்சபையின் புனிதரும் ஆவார். இவர் இறை இரக்கத்தின் தூதர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

“ஹெலெனா கொவால்ஸ்கா” (Helena Kowalska) எனும் இயற்பெயர் கொண்ட ஃபவுஸ்டினா, தமது பெற்றோரின் பத்து குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார். தச்சுத் தொழிலாளியும், விவசாயியுமான இவரது தந்தையின் பெயர், “ஸ்டானிஸ்லாவ் கொவால்ஸ்கி” (Stanisław Kowalski) ஆகும். இவரது தாயாரின் பெயர், “மரியான்னா கொவால்ஸ்கா” (Marianna Kowalska) ஆகும்.

இவருக்கு தமது வாழ்நாள் முழுவதும் இயேசுவின் திருக்காட்சிகள் தரிசனமாக காணக் கிடைத்ததாகவும், தாம் அவருடன் அடிக்கடி உரையாடியதாகவும் கூறியுள்ளார். இத்திருக்காட்சிகளை இவர் தமது நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். இக்குறிப்புகள் பின்னாளில் (Divine Mercy in My Soul) என்னும் பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தனது 20ம் வயதில் போலந்து நாட்டின் “வார்சா” (Warsaw) எனுமிடத்திலிருந்த கன்னியர் மடத்தில் சேர்ந்த இவர், பின்னாளில் “ப்லாக்” (Płock) நகருக்கும், அதன் பின்னர் “வில்னியஸ்” (Vilnius) எனுமிடத்திற்கும் மாற்றல் செய்யப்பட்டார். அங்கே, இவர் “அருட்தந்தை மிக்கேல் ஸ்போகோ” (Father Michał Sopoćko) என்பவரை சந்தித்து, அவரையே தமது ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டார். இவரின் துணையாலேயே கோவால்ஸ்காவின் காட்சிகளில் விவரித்தபடி முதல் இறை இரக்கத்தின் ஓவியம் வரையப்பட்டது. மேலும் முதல் இறை இரக்கத்தின் நாள் (உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு) திருப்பலியில் இவரால் அந்த ஓவியம் பயன்படுத்தப்பட்டது. பின்னர், திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) இறை இரக்கத்தின் விழாவை வருடாவருடம் அதே ஞாயிறன்று அனுசரிக்க ஏற்பாடு செய்தார்.

இவர் தனது நாட்குறிப்பேட்டில், இவரது செய்திகள் சிலகாலங்களுக்கு திருச்சபையினால் முடக்கப்பட்டு பின் ஏற்கப்படும் என முன்னுரைத்திருப்பது குறிக்கத்தக்கது. அவ்வண்ணமே இவர் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இவரது பக்தி முயற்சிகள் கத்தோலிக்க திருச்சபையினால் தடைசெய்யப்பட்டது. 1978ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு தடை நீக்கப்பட்டது. அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்ததாலும், போலந்தில் பொதுவுடமை வாதம் தழைக்க துவங்கியதாலும், வத்திக்கானுக்கும் போலந்து நாட்டுக்கும் இடையே இருந்த தொடர்பில் சிக்கல் ஏற்பட்டதால், இவரின் நாட்குறிப்பேட்டை மொழிபெயர்க்கும்போது பிழை ஏற்பட்டது. இதனால் இக்குழப்பம் நேர்ந்ததாகவும், அது கண்டு பிடிக்கப்பட்டதனால் தடை நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

2000ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் தேதியன்று, இவருக்கு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரே 21ம் நூற்றாண்டின் முதல் புனிதராவார். இவரது நினைவுத் திருவிழா நாள் அக்டோபர் 5 ஆகும்.

மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்

image