St. Denis St. Dionysius The Areopagite St. Vincent Kadlubek
St. Louis Bertran St. Inocencio DeLa Inmaculada St. John Henry Newman

அக்டோபர் 9

புனித டென்னிஸ்

mary

mary

புனித டென்னிஸ்

அக்டோபர் மாதம் 09 ஆம் தேதி நாம் புனித டென்னிஸுடைய விழாவைக் கொண்டாடுகிறோம் . இவர் பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலர் . பிரான்சின் புகழ் வாய்ந்தவரும் , மக்களுக்குப் பிடித்தமானவருமாவார் . இவர் உரோமையிலிருந்து மறைபரப்புப் பணிக்காக பிரான்சுக்குச் சென்றிருக்கிறார் . கி. பி . 258 ல் வலேரியன் நடத்திய கொலைபாதகச் செயல்களுக்குப் பலியானவர் . இவரது கல்லறை மேல் கி .பி .7 ஆம் நூற்றாண்டில் டாகோபெர்ட் அரசனால் ஒரு துறவற மடம் எழுப்பப்பட்டிருக்கிறது . அவர் காலத்தில் வாழ்ந்த மக்கள் அவரது புனிதத்துவத்தை நன்கு உணர்ந்திருந்திருந்ததால் அவருடைய பக்தி வளர்ந்தது. கடவுள் மனிதராகிய டென்னிஸை அந்நாள் முதல் இந்நாள்வரை இறைமக்கள் மறக்கவில்லை .

 

image