Bl. Maria Corsinib & Bl. Lugi Beltrame

St. Mercurisus St. Catherine of Alexandria

நவம்பர் 25

✠ புனிதர் கேதரின் ✠

mary

✠ புனிதர் கேதரின் ✠(St. Catherine of Alexandria)

✠கன்னியர்/ இளவரசி/ மறைசாட்சி
(Virgin, Princess and Martyr)

✠பிறப்பு : கி.பி. 287
அலெக்சாண்ட்ரியா, ரோமன் எகிப்து (Alexandria, Roman Egypt)

✠இறப்பு : கி.பி. 305 (வயது 17�18)
அலெக்சாண்ட்ரியா, எகிப்து (Alexandria, Egypt)

✠முக்கிய திருத்தலம் :
செயின்ட் கேதரின் துறவற மடம்  (Saint Catherine's Monastery)

✠பாதுகாவல் :
திருமணமாகாத பெண்கள், எதிர்த்து வாதிடுபவர்கள், சக்கரத்துடன் வேலை செய்யும் கைவினைஞர்கள் (குயவர்கள், நெசவாளர்கள்), இறக்கும் மக்கள், கல்வியாளர்கள், பெண்கள், நீதிபதிகள், கத்தி தீட்டுபவர்கள், வழக்கறிஞர்கள், நூலகர்கள், நூலகங்கள், பாலிஹோல் கல்லூரி (Balliol College), மாஸ்ஸி கல்லூரி (Massey College), மணமாகாத இளம் பெண், ஆலை உரிமையாளர்கள், தொப்பி தயாரிப்பாளர்கள், செவிலியர், தத்துவவாதிகள், சாமியார்கள், அறிஞர்கள், பள்ளிக் குழந்தைகள், செயலர்கள், தட்டச்சர், மாணவர்கள், இறையியலாளர்கள், ஓவியேடோ பல்கலைக்கழகம் (University of Oviedo), பாரிஸ் பல்கலைக்கழகம் (University of Paris), செஜ்டன் (Zejtun), மால்ட்டா (Malta), ஸுர்ரியேக் (Zurrieq), பக்பிலாவோ (Pagbilao), கியூசொன் (Quezon), ஃபிலிப்பைன்ஸ் (Philippines), கர்கர் நகரம் (Carcar City), செபு (Cebu), கடேரிணி (Katerini), கிரேக்கம் (Greece)

"அலெக்சாண்ட்ரியா நகர புனிதர் கேதரின்" (Saint Catherine of Alexandria) என்றும், "சக்கரங்களின் புனிதர் கேதரின்" (Saint Catherine of the Wheel) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், "மகா மறைசாட்சிப் புனிதர் கேதரின்" (The Great Martyr Saint Catherine) என்றும் அழைக்கப்படுகிறார். மரபுகளின்படி, கிறிஸ்தவ புனிதரும், கன்னியருமான இவர், நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசாண்ட ரோம பாகனிய பேரரசரான "மேக்சன்ஷியஸ்" (Pagan Emperor Maxentius) என்பவரது ஆட்சிக்காலத்தில் மறைசாட்சியாக மரித்தவர் ஆவார்.

இவரது சுயசரிதத்தின்படி, இளவரசியும், குறிப்பிடப்படும்படியான அறிஞருமான இவர், தமது பதினான்கு வயதில் கிறிஸ்தவ சமயத்திற்கு மனம் மாறினார். நூற்றுக்கணக்கான பாகன் இன மக்களை கிறிஸ்தவர்களாக மனம் மாற்றிய இவர், தமது பதினெட்டு வயதில் மறைசாட்சியாக கொல்லப்பட்டார். அவரது தியாகத்தை தொடர்ந்து 1,100 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றிய புனிதர் "ஜோன் ஆஃப் ஆர்க்" (Saint Joan of Arc), தமக்கு காட்சியளித்ததும், ஆலோசனைகள் கூறியதுவும் புனிதர் கேதரினே என்று அடையாளம் கண்டுகொண்டார்.

கேதரினம், பாரம்பரிய கதைகளின்படி, 286�305 ஆண்டு காலத்தில் ஆண்ட ரோமப் பேரரசர் (Roman Emperor) "மேக்சிமியன்" (Maximian) காலத்தில், எகிப்திய அலெக்சான்றியாவின் (Egyptian Alexandria) ஆளுநராக (Governor) இருந்த "கான்ஸ்டஸ்" (Constus) என்பவரது மகள் ஆவார். சிறு வயதிலிருந்தே கல்வியில் ஆர்வம் காட்டி கற்றுவந்த இவருக்கு காட்சியளித்த, குழந்தை இயேசுவை ஏந்தி வந்த அன்னை கன்னி மரியாள், கேதரினை கிறிஸ்தவராக மனம் மாறுமாறு அறிவுறுத்தினார்.

பேரரசர் "மேக்சன்ஷியஸ்" (Emperor Maxentius) கிறிஸ்தவர்களை துன்புறுத்த தொடங்கியபோது, கேதரின் பேரரசரை அணுகி, அவரது கொடுமைகளுக்காக அவரைக் கடிந்துகொண்டார். ஐம்பது சிறந்த பாகன் இன தத்துவவாதிகளையும் (Pagan Philosophers), திறமையான பேச்சாளர்களையும் (Orators) அழைத்த பேரரசர், கேதரினுடன் பொது விவாதத்தில் ஈடுபட உத்தரவிட்டார். அவர்கள் கேதரினுடைய கிறிஸ்தவம் சார்பான வாதங்களை தமது திறமையான வாதங்களால் நிராகரிப்பார்கள்; தப்பென்று எடுத்துக்காட்டுவார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால், கேதரின் அவரது எதிர்பார்ப்புகளை பொய்யாக்கினார். அவரை எதிர்த்து அவர்களால் ஜெயிக்க இயலவில்லை. கேதரின் தம்மை எதிர்த்தவர்களை தமது சொற்பொழிவால் வெற்றிகொண்டார். அவர்களில் பெரும்பாலானோர் தம்மை கிறிஸ்தவர்களாக சாற்றினர். அவர்களனைவரும் பேரரசனால் கொல்லப்பட்டனர்.

கேதரினை பிடித்து கசையால் அடித்து சிறையிலிட்டனர். குறுகிய கால வேளையில், அவரைக் காண இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சிறைச் சாலைக்கு வந்தனர். அவர்களை, பேரரசனின் மனைவியும், ரோமப் பேரரசியுமான (Empress of the Romans) "வலேரியா மேக்சிமில்லா" (Valeria Maximilla) ஒருவர். அவர்களனைவரும் கிறிஸ்தவர்களாக மனம் மாறினார்கள். தொடர்ந்து, அவர்களனைவரும் மறைசாட்சியர்களாக கொல்லப்பட்டனர்.

கொடூரமான துன்புறுத்தல்களால் அழகியும் புத்திசாலியுமான இளவரசி கேதரினை வசப்படுத்த இயலாத "பேரரசர் மேக்சன்ஷியஸ்" (Emperor Maxentius) திருமண ஆசை காட்டினான். அவனை புறங்கையால் நிராகரித்த புனிதர், தமது மணவாளன் இயேசுவே என்று சாற்றினார். தமது கன்னிமையை அவருக்கே அர்ப்பணிப்பதாகவும் அறிவித்தார். ஆத்திரமடைந்த பேரரசன், உடைந்த சக்கரத்தின் மீது கேத்தரினை கட்டி கொள்ளுமாறு கட்டளையிட்டான். ஆனால், கேதரின் அச்சக்கரத்தை தொட்டதுமே அது மேலும் உடைந்து தகர்ந்து போனது. இறுதியில், கேதரின் தலை வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

image