St. Sturninus Of Coulouse

நவம்பர் 29

✠ புனித சட்டுர்னினுஸ் ✠

mary

✠ புனித சட்டுர்னினுஸ் ✠ ( St. Saturninus )

தூலூஸ் நகர் ஆயர் :
நினைவுத் திருநாள் : நவம்பர் 29
பிறப்பு : 2 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 250
தூலூஸ், பிரான்சு
பாதுகாவல் :
தூலூஸ் நகர், தலைவலியிருந்து, சாவு பயத்திலிருந்து

புனித சட்டுர்னினுஸ் மிகப் பெரிய மரியாதைக்குரிய மனிதராக திகழ்ந்தார். இவர் 236-250ம் ஆண்டுவரை திருத்தந்தை ஃபபியான் Fabian அவர்களால் மறைப்பரப்பு பணியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டவர். இவர் ஓர் சிறந்த மறைபரப்பு பணியாளர்.

இவர் காலியன் Gallien என்ற நகருக்கு கைதியாக கொண்டு போகப்பட்டார். இவர் தனது மறைபரப்பு பணியின்போது பலரை மனந்திருப்பி, திருமுழுக்குக்கொடுத்து பணியாற்றியுள்ளார். நற்செய்தியை பரப்புவதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுள்ளார்.
கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர். இதனால் திருத்தந்தை ஃபபியான் இவரை தூலூஸ் நகருக்கு ஆயராக தேர்ந்தெடுத்தார். இவர் தூலூஸ் நகரின் "முதல் ஆயர்" என்ற பெருமைக்குரியவர். இவர் மறைப்பணிக்காக செல்லும்போது, காட்டுவிலங்கு ஒன்று இவரை கடித்துக்கொன்றது என்று கூறப்படுகின்றது.

செபம் :
இரக்கமே உருவான இறைவா!
தூலூஸ் நகர் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம் நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வாழ ஊக்கமூட்டியருளும். கிறிஸ்துவ மக்கள் ஒவ்வொருவரும் உமது நெறியில் வாழ்ந்து தொடர்ந்து உம் அன்பை சுவைக்க வரம் தாரும். ஆமென்

image