St. Barbara St. Bernard Of Parma
St. John Damascene St. Osmund

டிசம்பர் 4

தமாஸ்கஸ் நகர புனித யோவான்

mary

தமாஸ்கஸ் நகர புனித யோவான்
( St. John of Damascus )

மறைவல்லுநர் :

பிறப்பு : சுமார் 676 கி.பி.
தமாஸ்கு

இறப்பு : டிசம்பர் 4, 749
மார் சாபா, எருசலேம்

நினைவுத் திருவிழா : டிசம்பர் 4

தமாஸ்கஸ் நகர புனித யோவான் ஒரு சிரியன் கிறிஸ்தவ துறவியும் குருவும் ஆவார். தமாஸ்கு நகரில் பிறந்த இவர், எருசலேம் நகருக்கு அருகில் உள்ள மார் சாபா என்னும் மடத்தில் மரித்தார்.

பல்துறை வல்லுநர் :
பல்துறை வல்லுநராகிய இவர், சட்டம், இறையியல், மெய்யியல், இசை முதலியவற்றில் வல்லுனராக திகழ்ந்தார். இவர் தமாஸ்கு நகரின் காலிபாவிடம் தலைமை பொறுப்பாளராகப் முதலில் பணியாற்றினார். பின்னர் அவ்வேலையை விடுத்து துறவியானார். இவர் கிறித்தவ இறையியல் குறித்த பல நூல்களை இயற்றி உள்ளார்.திருவோவியங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தி இவர் மூன்று நூல்களை எழுதினார். இவர் இயற்றிய பாடல்கள் பலவும் இன்றளவும் கிழக்கு திருச்சபையினரால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர். இவர் மரியாவின் விண்ணேற்பை குறித்து விரிவாக எழுதியதால் இவர் விண்ணேற்பின் மறைவல்லுநர் (Doctor of the Assumption) எனப்படுகின்றார்.
இவருடைய திருவிழா நாள் திசம்பர் 4 ஆகும்.

இவர் கிரேக்கம் தவிர அரபு மொழியிலும் புலமை பெற்றிருந்தார் எனத் தெரிகிறது. மேலும், இசுலாமிய கலீபக ஆளுநரின் அவையில் புனித யோவானின் தந்தை பணிபுரிந்ததால் யோவானும் சிறிதுகாலம் அங்கு பணியாற்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

கடைசி திருச்சபைத் தந்தை :
சில உரோமன் கத்தோலிக்க அறிஞர்கள் கருத்துப்படி, புனித தமாஸ்கஸ் யோவான் திருச்சபைத் தந்தையர் வரிசையில் காலத்தால் இறுதியில் வந்தவர். திருவோவியங்களுக்கு வணக்கம் பற்றி : திருவோவியங்களுக்கு வணக்கம் செலுத்துவது முறையல்ல என்று பிசான்சிய மன்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தமாஸ்கஸ் யோவான் அந்த அரசு கட்டளைக்குக் கடினமான எதிர்ப்புத் தெரிவித்து நூல்கள் எழுதினார். அவர் எழுதிய நூல்கள் பின்னர் நிகழ்ந்த இரண்டாம் நீசேன் பொதுச்சங்கத்தின்போது திருவோவிய வணக்கம் பற்றிய சர்ச்சைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கிய ஆதாரமாகப் பயன்பட்டன.

 

image