St. Paola Elisabetta Cerioli)

டிசம்பர் 24

✠ புனிதர் பவுலா எலிசபெத்தா செரியோலி ✠

mary

✠ புனிதர் பவுலா எலிசபெத்தா செரியோலி ✠(St. Paola Elisabetta Cerioli)

✠கைம்பெண்/ நிறுவனர்/ மறைப்பணியாளர் :
(Widow/ Foundress/ Religious)

✠பிறப்பு : ஜனவரி 28, 1816
சோன்சினோ, க்ரெமோனா, லொம்பார்டி-வெனிஷியா அரசு
(Soncino, Cremona, Kingdom of Lombardy-Venetia)

✠இறப்பு : டிசம்பர் 24, 1865 (வயது 49)
கோமோண்டே டி செரியெட், பெர்கமோ, இத்தாலி அரசு
(Comonte di Seriate, Bergamo, Kingdom of Italy)

✠முக்திபேறு பட்டம் : மார்ச் 19, 1950
திருத்தந்தை பன்னிரெண்டாம் பயஸ்
(Pope Pius XII)

✠புனிதர் பட்டம் : மே 16, 2004
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

✠பாதுகாவல் :
திருக்குடும்ப சகோதரியர் கல்வி நிறுவனம்
(Institute of Sisters of the Holy Family)
பெர்கமோ குடும்பம்
(Family of Bergamo)

✠நினைவுத் திருநாள்: டிசம்பர் 24

புனிதர் பவுலா எலிசபெத்தா செரியோலி, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர் ஆவார். ஒரு விதவைப் பெண்ணான இவர், "திருக்குடும்ப சகோதரியர்" (Institute of Sisters of the Holy Family) என்ற கல்வி நிறுவனத்தையும், "பெர்கமோ குடும்பம்" (Congregation of the Family of Bergamo) எனும் ஆன்மீக சபை ஆகிய இரு நிறுவனங்களையும் நிறுவியவர் ஆவார்.

"கொஸ்டன்ஸா செரியோலி புசெச்சி-டசிஸ்" (Costanza Cerioli Buzecchi-Tasis) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கி.பி. 1816ம் ஆண்டு, "ஃபிரான்செஸ்கோ செரியோலி" (Francesco Cerioli) மற்றும் "ஃபிரான்செஸ்கா கொர்னியானி" (Francesca Corniani) ஆகிய பெற்றோருக்கு பிறந்த பதினாறு குழந்தைகளில் கடைக்குட்டியாக பிறந்தவர் ஆவார். தமது பதினோரு வயது (கி.பி. 1827) முதல் பதினாறு வயதுவரை (கி.பி. 1832) பெர்கமோவில் உள்ள பள்ளியில் கல்வி கற்றார்.

இவர், கைக்குழந்தை பருவம்முதல் இதயம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வாழ்நாள் முழுதும் நலிந்த உடல்நலம் கொண்டவராகவும், பலவீனமானவராகவுமே வாழ்ந்தார். அவரது பிரத்தியேக பண்பு அவரை ஓரளவு மாற்றியது என்றாலும் அவரது மத நம்பிக்கை, அனுபவம் மற்றும் அவரது தாராள மனப்பான்மை ஆகியன அவருக்கு உள்மன வலிமையைத் தந்து அவர் ஸ்திரமாக வாழ உதவியது.

கொஸ்டன்ஸா செரியோலியின் பத்தொன்பதாவது வயதில் (கி.பி. 1835) அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கி.பி. 1835ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 30ம் தேதி, அவர் "கேட்டனோ புசெச்சி" (Gaetano Busecchi) என்ற 59 வயதான முதியவரை மணந்தார். இவரது கணவருக்கு ஏற்கனவே ஒரு கோமாட்டியுடன் (Countess) திருமணமாகி, அவர் மரித்துவிட்டார். அவரது பத்தொன்பது வருட திருமண வாழ்கை முழுதும் தமது முதிய கணவரின் கடின குணங்களுடனும் நலிந்த ஆரோக்கியத்துடனும் போராட வேண்டியிருந்தது. நான்கு தடவை கருத்தாங்கிய செரியோலிக்கு மூன்று குழந்தைகள் குறைப் பிரசவமாக பிறந்ததால் மரித்துப் போயின. தப்பிப் பிழைத்த ஒரு குழந்தையும் பதினாறு வயதில் மரித்துப் போனது. இவரது குழந்தை "கார்லோ" (Carlo) மரித்துப்போன அதே ஆண்டில் (கி.பி. 1854) அவரது கணவரும் மரித்துப்போனார்.

கணவரையும் குழந்தையையும் ஒருசேர மரணத்திற்கு பறிகொடுத்த செரியோலி, துயர வாழ்க்கையில் ஆழ்ந்து போனார். கடவுளும், மத விசுவாசமுமே அவருக்கு வழிகாட்டியாக அவர் உணர்ந்தார். இதனால் தன் உடமைகளை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்த இவர், கைவிடப்பட்ட இளம் அனாதை பிள்ளைகளுக்கென்று ஓர் சபையை நிறுவினார்.

தியானம், ஜெபம் போன்றவற்றிலும், ஏழை மற்றும் அனாதைகளுக்கு உதவுவதிலும், மீதமுள்ள வாழ்க்கையைக் கழிக்க முடிவெடுத்தார். கி.பி. 1867ம் ஆண்டு, "திருக்குடும்ப சகோதரியர்" என்ற கல்வி நிறுவனத்தை நிறுவினார். இத்தருணத்திலேயே இவர் "பவுலா எலிசபெத்தா" (Paola Elisabetta) என்ற பெயரை தமது ஆன்மீக பெயராக ஏற்றுக்கொண்டார். கி.பி. 1863ம் ஆண்டு, நவம்பர் மாதம், நான்காம் தேதி, "ஆண்களுக்கான திருக்குடும்ப சபையை" (The men's Congregation of the Holy Family) நிறுவினார்.

நாற்பத்தொன்பது வயதான புனிதர் பவுலா எலிசபெத்தா செரியோலி, கி.பி. 1865ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 24ம் தேதி, தமது இல்லத்தில் மரித்துப்போனார்.

image