St. Anastasia Christmas St. Peter Nolasco

ஜனவரி 25

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

mary

கிறிஸ்து பிறப்பு பெருவிழா

'உலகின் மீட்பர் இயேசு'வின் பிறந்த தினமே கிறிஸ்துமஸ் திருநாளாக உலகெங்கும் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டுவகிறது. இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவுகூரும் வகையில் சுமார் ஒரு மாத காலம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிற விழாவாகவும், அதே நேரத்தில் உலகின் பெரும்பாலான மக்களால் நினைவுகூரப்படுகிற ஒரு பண்டிகையாகவும் கிறிஸ்துமஸ் திகழ்கிறது.

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு பரிசுகள், வாழ்த்துகள், பாடல்கள், குடில் மரத்தை அலங்கரித்தல்... என உலகமே உற்சாகமாக இருக்கும்

" 'கிறிஸ்துமஸ்' கடவுள், மனிதரானதைக் கொண்டாடும் விழா. கண்களால் தரிசிக்க முடியாத கடவுள், தொட்டுவிடும் தொலைவில் ஆன்மிக உணர்வாகி, ஆழ்மன இருளகற்றும் பேரொளியானதால் மட்டுமல்ல; அமைதிக்கான வழியை அடையாளம் காட்டியதால், மக்கள் அகமகிழ்ந்து கொண்டாடும் ஓர் உன்னத விழாவாக 'கிறிஸ்துமஸ்' பண்டிகை கொண்டாட்டப்படுகிறது.

ஏழ்மையைத் தேர்ந்தேடுத்து, பெத்லகேம் என்னும் சிற்றூரில் எளிமையிலும் எளிமையாக, அதுவும் மாட்டுத்தொழுவத்தில் பிறப்பெடுப்பது என்பது சாதாரண நிகழ்வல்ல. இப்படி ஏழ்மையையும் எளிமையையும் தேர்தெடுத்துப் பிறந்ததால், ஏற்றமிகு வாழ்வுக்கு வழிகாட்டியாக மட்டும் அல்ல; வழியாகவே வந்ததால்தான் கிறிஸ்துமஸ், ஆனந்தத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் மிக ஆடம்பரமாகக் கொண்டாடப்படுகிறது.

கடைநிலை மனிதர்களுக்கும் உண்மையான மற்றும் உறுதியான நம்பிக்கைத் தரும் ஓர் அற்புத விழா. 'கடவுள் நம்மோடு' என்ற பொருளுடன் விண்ணிலிருந்து வந்த விடியலாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பு அமைவதோடு, அனைவருக்கும் நம்பிக்கையூட்டுகிறது.

அதுவரையில் காரிருளில் நடந்துவந்த மக்கள், முதன்முதலாக பேரொளியைக் கண்ட நாளாக அனைவருக்கும் அமைந்தது. ஒளியான இறைவனே உலகைத் தேடிவந்த நாளாக இருக்கும் 'கிறிஸ்துமஸ்' தினத்தன்றுதான், மனிதகுலத்தில் சாவின் நிழல் சூழ்ந்த மக்கள் மேல், முதன்முதலாக சுடர் ஒளி உதித்தது.

அப்படிப்பட்ட கிறிஸ்துமஸ் விழா நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான்... ‘மனிதனே உனக்கான ஒளி தோன்றி உள்ளது. ஆண்டவரின் மாட்சிமை உன் மீது உதித்துள்ளது. எழு, ஒளி வீசு.’ இதனால்தான், கிறிஸ்து பிறப்புப் பெருவிழா அன்பின் விழாவாகவும், பகிர்வின் விழாவாகும், நம்பிக்கையின் விழாவாகவும், விடுதலையின் விழாவாகவும் உணரப்படுகிறது.

இயேசு, மனிதம் மாண்புற இறைமனிதரானார். மானுட விடுதலை, மானுடம் காக்கப்படுவதில் உள்ளது என்பதை இயேசு போதித்தும் வாழ்ந்தும் காட்டினார். இறையரசின் விழுமியங்களான அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு போன்ற மாண்புகள் நம்மிடையே நிறைவேற நமது பங்களிப்பு இன்று அவசியம். முடிந்த அளவுக்கு அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம். சகோதரத்துவம் பாராட்டுவோம். இதன்பால், மனித மாண்புகள் இயல்பாக மேலோங்கும்.

இந்த கிறிஸ்து பிறப்பு தினத்தில், ஒவ்வொரு மனிதனையும் முழு மனிதனான இயேசுவின் சாயலாகப் பார்க்கும் புதுப்பார்வை நம் ஒவ்வொருவருக்கும் பிறக்கட்டும்!" அனைவருக்கும் இனிய 'கிறிஸ்துமஸ்' நல்வாழ்த்துக்கள்!

 

image