ஒருமுறை பாடுவது
இருமுறை ஜெபிப்பதற்கு சமம்

dm

- இந்த இணைய தளத்தில் தரப்படும் MP3 பாடல்க் (மொத்தம் 1254) இறைபுகழ் பாட மட்டுமே!
-உங்களுடைய கணனியில் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு தரப்படுகிறது.
-தவறான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுகிறோம்


பாடல்கள்- சொந்த (இயல், இசை) பதிவாக இருந்தால் உரிமையாளரின் அனுமதியோடு
இங்கே தரப்படுகிறது.

பல பழைய பாடல்கள் மறுபதிவு செய்யப்பட்டுள்ளதால் உரிமையாளர்களை கண்டறியவோ
அல்லது தொடர்பு கொள்ளவோ இயலவில்லை.


இசை - மனிதர் வாழும் நாடு, பேசும் மொழி, இனம், கலாச்சாரம் என எல்லாம் கடந்து நம்மை இறைவனோடு ஒன்றிக்கச் செய்யும் உன்னத கலை. "தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் தேவதாரு மரத்தாலான இசைக்கருவிகளோடு, யாழ், வீணை, சுரமண்டலம், மேளம், தாளம் ஆகியவற்றோடும் ஆண்டவருக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டு வந்தனர்" என்று நாம் 2சாமுவேல் 6:5ல் வாசிக்கிறோம். இறைமகன் இயேசுவும் சீடர்களும் புகழ்பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள் என்று மத்தேயு 26:30ல் வாசிக்கிறோம். அருள் வாழ்வில் வளர திருஇசை இன்றியமையாதது. இறைவனோடு ஒன்றிக்க பாடல்கள் ஒர் அற்புதமான கருவி என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பக்திப் பாடல்களை நாம் பாடுவதன் மூலம் இறைவனைப் புகழ்ந்து அவரில் ஒன்றிக்கவும், மன்றாடவும், மகிழ்ந்திருக்கவும், அருள் வாழ்வில் நாம் நிலைத்து நிற்கவும் வழிசெய்கிறது.

வழிபாட்டில் பொருளுணர்ந்து பங்கேற்க, பாடல்களைக் கேட்டால் மட்டும் போதாது. மாறாக இணைந்து பாடுவதன் மூலம் நாம் இறையனுபவத்தைப் பெறமுடியும். இந்த இறைஅனுபவம் நம்மைக் கடவுளுக்கும், சமூகத்திற்கும் ஏற்றவர்களாகவும் பிறர் நலப்பணிகள் ஆற்றும் தன்மையுடையவர்களாகவும் மாற்றும். இவ்வனுபவத்தைப் பெற இத்தளத்தில் தரப்படும் பாடல்கள் உதவிசெய்யும் என்று நம்புகிறோம்.

ms