|
0581. உலகிற்கு ஒளியாய் உயிருக்கு வழியாய்
துலங்கிடும் உமக்கே இறைவா
நன்றி நன்றி இறைவா நன்றி கூறுகின்றோம்
1. இயேசுவின் குரலை இதயத்தில் கொண்டு
இணையில்லா பலியில் இறைவனை உண்டு
சென்றிடும் வழியில் சொல்லிடும் மொழியில் ஆ
நின்றிட அழைத்தாய் நிலைப்போம் தினமும்
2. உண்மை வழியை உலகுக்குக் காட்ட
உலகத்தை அன்பால் ஒன்றாய் திரட்ட
அகயிருள் அகற்றி இறையருள் புகுத்த ஆ
அன்புடன் அளித்தோம் எம்மையே உமக்கு
|