ஆண்டின் பொதுக்காலம்
8ஆம் வாரம்
மூவொரு கடவுள் விழா |
அருட்திரு. D. பீட்டர் ஜெயக்காந்தன் S.S.S (நற்கருணை சபை)
(கிறிஸ்துவின் திருவுடல் ஆலயம், ஹூஸ்டன், டெக்சாஸ், அமேரிக்கா )
e-mail : petjaya@gmail.com
கூட்டு சமூகத்தில்: சார்ந்து….செயல்பட!
நீதி.மொ 8:22-31;
உரோமை 5:1-5;
யோவா 16:12-15
கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சிறார்களே இளையஉள்ளங்களே சகோதர சகோதிரியரே
மூவொரு இறைவனின் திருநாமவிழா திருவிருந்திற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். அன்றாடம் திருப்பலி உட்பட பலதருணங்களில் நாம் பயன்படுத்தும் உச்சரிக்கும் செபிக்கும் மூவொருஇறைவனின் திருநாமசெபம் நம்மில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சிந்திக்க இந்தநாளின் திருவிழா நமக்கு அழைப்புவிடுக்கிறது.
கர்த்தர் கற்பித்தசெபத்தை விரைவாக வேகமாக சொல்லபழகி திண்ணையில் வாழ்ந்து வாழ்க்கையை நடத்துபவர் செபிக்கும்பொழுது திண்ணையிலிருந்து விடவிழாதேயும் என்பதை தீமையிலிருந்து என்பதற்குபதிலாக சொல்லிசெபித்துபழகிபோனாராம். இது நாம் செபிக்கின்ற வார்த்தைகளின் அர்த்தத்தை நாம் உணராமல் ஒரு வாடிக்கையாக சொல்வது நம்மில்இருந்துவிடுகிறது. அதுபோல தந்தை மகன் தூயஆவியாரின் திருநாமசெபத்தை நாம் உச்சரிக்கும்பொழுது அல்லது சிலுவை அடையாளம் வரையும்பொழுது அதன் உள்ளார்ந்த அர்த்தத்தை உணர்ந்து வாழ அழைக்கப்படுகிறோம்.
மூவொருஇறைவனின் தந்தை-மகன்-தூயஆவியானவரின் செபம் அல்லது சிலுவை அடையாளம் இன்று நமக்கு சொல்லும் செய்தி என்ன? தந்தை-மகன்-தூய ஆவியானவர் என்பதை நாம் என்றும் பிரித்து சொல்வதும் கிடையாது மேலும் ஒருவரை விட்டுவிட்டு சொல்லுவதும் கிடையாது. இந்த பிரியாத பிரிக்கஇயலாத பண்பும் தன்மையும் இவர்களிடம் விளங்கும் சமூக கூட்டுவாழ்வு செயல்பாட்டை நமக்கு எடுத்துரைக்கிறது. இவர்களின் இந்த சமூக கூட்டுவாழ்வு இறைவார்த்தைகளிலும் மற்றும் இன்றும் தொடர்ந்து திருச்சபையில் பிரசன்னமாகயிருக்கின்றது. நம் இறைவன் தனிமையில் தனிமையாக பிரசன்னமாவது கிடையாது. சுயநலகடவுள் கிடையாது. மாறாக இறைவனின் சமூக கூட்டுறவை நமக்கு வெளிப்படுத்துகிறது. நமது ஆன்மிகம் தனிமையில் இறைவனை தேடுவது கிடையாது மாறாக சமூக கூட்டுறவில் இறைவன் அனுபவத்தை பெறுவது. இஸ்ராயேல் மக்களின் விடுதலை இறைஅனுபவம் ஒரு சமூககூட்டு அனுபவம். திருத்தூதர்களி;ன இறைஅனுபவம் உயிர்த்தஇயேசுவின் தூய ஆவியானவரின் சமூக கூட்டு அனுபவம். முதல் கிறிஸ்தவர்கள் ஒரே சமூகமாக கூடிவந்து அப்பத்தை இறைவார்த்தையை பகிர்ந்து வாழ்ந்தனர். திருச்சபை என்ற கூட்டு சமூகத்தில் மூவொரு இறைவன் இன்றும் பிரசன்னமாகயிருக்கின்றார். மூன்றுபேர் இணைந்து உருவாக்குவது ஒருகூட்டு சமூகம் ஆகும். இதுவே உறவின் முழுமையாகும்.
இயேசு இறைதந்தையை பற்றி நமக்கு கற்பித்தார். இறைவனை “அப்பா” மாற்14:36 என்று பாலஸ்தீன பழக்கமொழியில் பேச கற்றுக்கொடுத்தார். யோவான்14:16 15:26 16:7 இவைகளில் இயேசு தூய ஆவியானவரை நமக்கு கற்றுகொடுத்திருப்பதை நாம் காண்கின்றோம். தூய ஆவியை நமது ஆலோசகர் என அழைப்பதை நாம் அறிவோம். யோவான் 3:16ல் இறைதந்தை நம்மேல் இவ் உலகின் மேல் அன்புகொண்டு தம் ஒரே மகனை நமக்கு அனுப்பினார் என்பதை குறிப்பிடுகிறார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் தற்தை மகன் தூய ஆவியானவரின் திருநாமத்தை வெளிப்படையாக எடுத்துரைக்கிறாh.; நற்செய்தியில் இயேசு தந்தையுடையதெல்லாம் என்னுடையவையே என்று பகிர்ந்து தூய ஆவியானவரை அனுப்புவேன் என உறுதியளிகிகிறார். மேலும் நாம் ஒவ்வொரு முறை திருப்பலி தொடக்கத்தில் பயன்படுத்தும் வாழ்த்து ஆசீராகிய தந்தையாகிய கடவுளின் அன்பும் இயேசுவின் அருளும் தூய ஆவியின் தோழமைஉணர்வும் என்பது 2கொரி 13:14 இல் பவுல் அடிகளாரின் கிறிஸ்தவ உள்ளங்களுக்கு கொடுத்த வாழ்த்துநற்செய்தியிலிருந்து தொடர்ச்சியே ஆகும். இவைகள் அன்றைய முதல்கிறிஸ்தவ சமூகம் எவ்வாறு மூவொரு இறைவனின் சமூககூட்டுவாழ்வை பின்பற்றினர் என்றும் சாட்சிகளாக வாழ்ந்தனர் என்றும் வெளிப்படுகிறது.
இந்த மூவொரு இறைவனின் கூட்டுசமூக வாழ்வின் சிறப்பு மேலும் உள்ளார்ந்த உணர்வு என்பது சமூகத்தை சார்ந்து இருப்பது மேலும் சமூகத்திற்காக சுயநலமின்றிசெயல்படுவது ஆகும். தந்தையை நான் அறிவேன் தந்தை என்னை அறிவார். என்ற இயேசுவின் உறுதிப்பாடும் தூயஆவி பெற்றுத்தரும் இயேசுவின் பிரசன்னமும் சமூகத்தை சார்ந்து மற்றும் சமூகத்திற்காhக செயல்படும் உணர்வைகாட்டுகிறது. தந்தை – மகன் - தூய ஆவியானவர் எவ்வாறு ஒருவர் ஒருவரை சார்ந்து அதேசமயம் ஒருவர் மற்றவர்களுக்காக சுயநலமின்றி செயல்பட்டனர் என்பது ஒரு கூட்டுமுயற்சியே என்பதை எடுத்துகாட்டுகிறது. நம்முடைய பங்கு சமூக கூட்டு வாழ்வில் இத்தகைய சார்ந்து சமூகத்திற்காக சுயநலமின்றி செயல்படுவது எத்தனைபேர்? நான் ஏன் பிறருக்கு பாடமாக இருக்கதகூடாது? நான் ஏன் மூவொரு இறைவனை பிரதிபலிக்ககூடாது?
நாம் திருப்பலி உட்பட அனைத்து செபங்களையும் தந்தை-மகன்-தூய ஆவி என மூவொரு இறைவனின் நாமத்தில் துவங்குகிறோம். திருமுழுக்கு – உறுதிப்பூசுதல் - ஒப்புரவு – திருமணம் -நோயிற்பூசுதல் அருட்சாதனங்களை தந்தை-மகன்-தூய ஆவியின் திருநாமத்தில் நாம்பெற்றுக்கொள்கிறோம். இனிமேல் மூவொரு இறைவனின் பெயரால் சிலுலை அடையாளம் வரையும் பொழுது செபிக்கும் பொழுது உணர்ந்து செபித்து நம் கூட்டு சமூகத்தில் சார்ந்து வாழ்ந்து சுயநலமின்றி செயல்படும் சாட்சிகளாவோம் -ஆமென்.
-----------------------------------------------------------------
Most Holy Trinity Sunday 2013 – year C 26-05-2013
Trinity is A Life of Community: Belonging…….Becoming!
Prov 8:22-31; Rom 5:1-5; John 16:12-15
Dear brothers and sisters, we celebrate the Most Trinity Sunday today. We use the Trinitarian formula on various occasion of our daily life, yet we rarely take time to reflect on this. We may pause for a while today when we make sign of the cross and recognize the communitarian life of Father, Son and Holy Spirit. We shall enrich our life in the community through this Eucharistic celebration.
Ann had been teaching her three-year old daughter, Caitlin, the Lord's Prayer. For several evenings at bedtime, she would repeat after her the lines from the prayer. Finally, she decided to go solo. Ann listened with pride as she carefully enunciated each word, right up to the end of the prayer: "Lead us not into temptation," she prayed, "but deliver us some E-mail.
We repeat our prayers so often that we don’t realize the meaning of the words in those prayers. One such is the Trinitarian formula, Father, Son and The Holy Spirit. We don’t separate them and we don’t miss one of them when we pray this prayer. This shows the communitarian love they have and lived out in the scriptures and continue to be alive in the life of the Church. God does not exist in isolated individualism but in a community of relationships. In other words, God is not a loner or a hermit. This means that a Christian in search of Godliness (Matthew 5:48) must reject every tendency to isolationism and individualism. The ideal Christian spirituality is not that of flight from the world like that of certain Buddhist monastic traditions where the quest for holiness means withdrawal to the Himalayas away from contact with other people and society. True love requires three persons, true team work needs three persons and true community exists in three persons. You remember the old saying "Two is company, three is a crowd." The Trinity shows us that three is community, three is love at its best; three is not a crowd.
Jesus taught us about his Father. He called his Father, “Abba.” (Mark 14:36) In the language of Palestine at the time of Jesus (Aramaic), that means, “Daddy.” The Father is Jesus’ Daddy. (Rom 8:14-17) Paul also refers to the Father as Abba, Daddy. Jesus also taught us about the Holy Spirit. He called the Holy Spirit the Counselor or Paraclete (John 14:16, 26; 15:26; 16:7); in other words the Holy Spirit is interceding or mediating for us. “God loved the world so much that he gave his only Son...” (John 3:16). St. Paul refers to God the Father, Son Jesus and Holy Spirit in today’s second reading. In the Gospel of today, Jesus says, all that the father has is mine and He assures the pouring of the Holy Spirit to Apostles. We read in 2Cor13:14 the grace of the Lord Jesus Christ, and the love of God, and the communion of the Holy Spirit be with you all. St. Paul mentioning of this Trinitarian formula is being used as the greeting in the beginning of Mass. It shows the communitarian life they followed and witnessed from the Holy Trinity.
What does the communitarian life offers? It offers the sense of belonging and self-less becoming. We observe this in the Father, Son Jesus and in the Holy Spirit. One God and three persons yet not separated. Each attributes one another. Each of them become for others selflessly. Father the world through Son Jesus, Jesus becomes word and savior for Father and the Holy Spirit brings the presence of Jesus.
We like to belong. We like to belong to a family, to a parish, to a community. No one is an island and we need the love, support and friendship of others in our family and community. Not only do we like to belong, we need to belong. It is not good to be alone. It is for our good to belong. When people move into a town you would hear them say that the people made them welcome or you might hear them say that they joined all the clubs and societies to try to get know the people and they still felt as outsiders. No one wants to feel as an outsider. We all want to belong. Above all we want and need to belong to our family. Our sense of belonging is nurtured when we become for someone selflessly. Saints and Leaders sustained the community and their religious society through their selfless becoming.
We begin all our prayers in the name of the Holy Trinity and end glorifying the Trinity. All sacraments are administered (we are baptized, confirmed, anointed, our sins are forgiven and our marriage blessed), in the Name of the Holy Trinity. Church bells can ring thrice daily, to remind us to pray to the Holy Trinity. We bless ourselves, and the priest blesses us, in the name of the Holy Trinity. When we do these henceforth we may sustain our sense of belonging to our particular parish community and remind our call to serve selflessly for others-Amen.
|