ஆண்டின் பொதுக்காலம்
27ஆம் வாரம்

அருட்திரு. D. பீட்டர் ஜெயக்காந்தன் S.S.S (நற்கருணை சபை)

dl

நம்மோடு........சாராதவர்களா .......சார்ந்தவர்களா!!!

தொ.நூ 2:18-24,
எபி 2:9-11,
மாற் 10:2-16

கிறிஸ்துவில் பிரியமுள்ளவர்களே சகோதர சகோதிரியரே,

இன்றைய வழிபாட்டிற்கு உங்களை அன்போடு அழைக்கின்றேன். இணைந்துவாழ்தலே இல்லறத்தின் மகிமை என்ற கருத்தை தரும் இன்றைய வாசகங்கள் நம் குடும்ப உறவுகளை புதுப்பித்து அர்த்தமாக்கிகொள்ள துணையாக அமையட்டும். திருச்சபையின் இவ்வாரத்து சிறப்பு நிகழ்வுகளுக்கு நம் செபங்களை அர்ப்பணமாக்குவோம்.

திருமண வாழ்வில் 30 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கான கருத்தரங்கில் புதிதாக திருமணமாகும் தம்பதிகளுக்கு உங்களுடைய செய்தி என்ன என்றுகேட்டபொழுது அவர்கள் சொன்னது. மூன்று நிலவை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும் அதாவது தேனிநிலவு-தனிநிலவு-நோநிலவு.

திருமணமான புதிதில் தேனிலவு காலங்கள் அதாவது ஒரே நிலா-நிலவு போல் ஒரேதட்டு ஒரேகிண்ணம் ஒரேடம்ளர் என்ற பிரித்துப்பார்க்காத ஒன்றிப்பு இருக்கும்.
சிறிது வருடங்கள் கழித்து அதே நிலவு தனித்து விட்டதுபோல் தோன்றுவது தான் தனி நிலவு அனைத்தையும் தனித்து செய்வது போலஒரு உணர்வு மருத்துவமனைக்கு நீங்க தனியாப்போங்க-ஆலயத்துக்கு தனியாபோங்க-தனியா நீங்களே பரிமாறி சாப்பிடுங்க என்ற அனுபவ நிலைகள். இறுதியாக அந்த நிலவை பார்க்க இயலாதநிலை மேகம் மறைப்பதனால் நோ நிலவு. சாப்பிடாச்சா-எங்கே உங்களை காணோமே-என்று கவலைப்படாத-ஒன்றும்யாரும் நினைத்துப்பார்க்காத நிலை. இந்த மூன்று நிலைகளிலும் வாழவேண்டும் என்று கூறினர்.

அனைத்திலும் இணைந்து வாழ்வேன் என்ற திருமண வாக்குறுதி நம்மில் மறந்துபோவதாலே பல பிரிவினைகள் வருகின்றன விவாகரத்து(மணவிலக்கு) அமெரிக்க ஜரோப்பிய நாடுகளில் 50சதவீததிற்குஅதிகமாகஇருப்பது அதிலும் மூன்று முறை மணவிலக்கு செய்வோர் மகிழ்ச்சியில்லா வாழ்வு வாழ்வதை புள்ளியியல் சொல்கிறது. அதுவும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியிலே அதிகமாகி வருகிறது. நம் மத்தியிலும் நினைத்துபார்க்க முடியாத வகையில் தலைக்காட்ட துவங்கிவிட்டது. இதற்கு காரணம் நாம் நம் உறவை மதிக்காமல் வாழ்வின் மையமாக வைக்காமல் இருப்பதால் தான்.

இன்றைய முதல் வாசகத்தில் பலதாரதிருமணமுறை பழக்கத்திலிருந்த சூழலில் தொடக்கநூலின் ஆசிரியர் படைத்த இறைவனின் நோக்கத்தை அவர் படிப்பினையை எடுத்துரைத்து ஞாபகபடுத்துகின்றார். மனிதனுக்கு தகுந்ததுணைக்காக விலா எலும்பை அவனிடமிருந்து எடுப்பது அவனில் ஒன்றாக ஒரபகுதியாக என்பதை எடுத்துரைக்கிறது. எலும்பும் சதையும் ஆனவள் என்பது. எலும்பு சக்தி மற்றும் பலத்தை குறிக்கிறது சதை பலவீனத்தை குறிக்கிறது இது இரண்டுபேரும் பலத்திலும் பலவீனத்திலும் துன்பத்திலும் இனபத்திலும் ஒரே உடலாய் ஒரே மனமாய் இணைந்து வாழவேண்டும் என எடுத்துரைக்கிறது.
நற்செய்தியிலே இயேசுவை மடக்கிவிட எண்ணி கேட்கின்றனர். யூதர்கள் பழக்கத்தில் ஆண் எந்த நேரத்திலும் காரணமே இல்லாமலே மனைவியை விலக்கி மணவிலக்கு செய்யலாம். ஆனால் பெண்ணே ஒருசில காரணங்களுக்கு மட்டுமே மணவிலக்கு செய்யலாம். ஒன்று கணவன் தொழுநோயால் பாதி;க்கப்பட்டிருந்தால் இரண்டு கணவன் யாரையாவது கொலை செய்திருந்தால் மூன்றாவது கணவனோ அவன் குடும்பத்தாரோ பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே மணவிலக்கு செய்யலாம் இது நிகழ்வது மிக மிக கடினம். இயேசு இத்தகைய சூழ்நிலையில் மோசே மணவிலக்கு அளித்தது தற்காலிகமாக கொடுத்த சலுகையே ஆகும் இது சிலரால் பாதிக்கப்பட்ட சமூகத்தை மீட்பதற்காகவே ஆக ஒன்றித்து இணைந்து இருப்பதே இணையான திருமணவாழ்வு என்கிறார்.

ஒன்றித்து ஒரேஉடலாக வாழ்தல் என்பது இணைந்து வாழ்தலை குறிக்கிறது. கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலே – உடல் நலக்குறைபாடு நிலவும்பொழுது – எதிர்பாரதநிகழ்வுகள் ஏற்படும்பொழுது இணைந்துவாழமுடியும். சுற்றியிருப்பவர்கள் தன் மனைவியையோ அல்லது கணவனை பற்றியோ தவறாக சொன்னாலும் நமக்கு மற்றவர் மேல் மதிப்பும் அவர்களே என் வாழ்வின் மையம் முக்கியம் என்ற எண்ணம் ஆழமாக இருந்தால் இணைந்து வாழ்தலை யாரும் தடுக்க பிரிக்க இயலாது.

சமீபத்தில் 62வருடங்களாக திருமணமான தம்பதியரை சந்திக்கநேர்ந்தபொழுது இருவரும் சொன்னது தன் கணவர் தான் - தன் மனைவி தான்; எல்லாம் என்று வாழ்வதால் எந்த நோயும் துன்பமும் சோதனையும் எங்களை பிரிக்கவில்லை என்றார்கள்.

தன் மகளின் திருமணம்முடிந்து கணவன் இல்லத்திற்கு போகும்பொழுது அந்ததாய் தன்மகளிடம் உன் பெயரில் வங்கிகணக்கை இன்று துவங்கி ரூபாய் 500 போட்டுள்ளேன் அதையே உனக்கு அன்பளிப்பாக தருகின்றேன் நீ ஒவ்வொரு நல்ல நிகழ்ச்சியின் பொழுதும் ரூபாய் 500 யைஅதில் போட்டுவை என்றார்கள். சில வருடங்கள் கழித்து தன் குடும்பத்தில் மகிழ்ச்சியில்லா நிலையை அந்தப்பெண் தாயிடம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தால் திடீரென ஒருநாள் தன் துணிகளோடு பிள்ளைகளை விட்டு விட்டு கணவனை விட்டு விட்டு தாயிடம் வந்து மனம்நொந்து அழுது மீண்டும் போகமாட்டேன் என்றாள்.தாய் அவள் சொன்ன குறையை கேட்காமல் தான் கொடுத்த அந்த வங்கி புத்தகத்தை கேட்டாள் அதை கையில் பெற்றவுடன் நான் 500ரூபாயோடு கொடுத்தேன் நான்கு வருடத்தில் எவ்வாறு 70000 யை எட்டியது என்றவுடன் நீங்க சொன்னது போல் ஒவ்வொரு முறை நல்லது நடந்தபோது 500ரூ போட்டேன் என்றாள் அவை என்னவென்று சொல்லமுடியுமா எனத்தாய்கேட்க மகளோ எங்கள் பிறந்தநாட்கள் நிகழ்வுகள் திருமணநாள் நிகழ்வுகள் பல நல்ல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது ஒன்றாக பல இடங்களுக்குசென்றது பலபோட்டிகளில் கலந்து கொண்டது பலபரிசுகளை ஒவ்வொருவரும் பகிhந்துகொண்டது-பிள்ளைகளின் பிறப்பு-பிறந்த நாள்-பள்ளிநாள் என்று அடுக்கிக்கொண்டே போக தாய் தன்மகளை நிறுத்தி இவ்வளவு நன்மைதனங்களை நீ பார்க்கமறந்ததேன் ஒவ்வொரு நிகழ்வும் உங்களுக்குள்ள ஒன்றிப்பை - இணைப்பை . மதிப்பை எடுத்துசொல்கிறது என்றார்.

தினமும் சொல்வோம் தவறாது எடுத்துரைப்போம் நீங்கள் தான் முக்கியம் நீ தான் மையம்- உன்னை நான் மதிக்கிறேன் அப்பொழுது எந்நாளும் இணைந்திருப்போம். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பொன்விழா நினைவாக துவங்க இருக்கும் விசுவாசத்தின் ஆண்டிற்காகவும் மற்றும் உலக ஆயர் பேரவைக்காகவும் இணைந்து குடும்பமாக செபிப்போம்-ஆமென்.
------------------------------------------------------------------

27th Sunday of Ordinary Time-Year B 07-10-2012
Two become ONE  ……...
Gen 2:18-24, Heb 2:9-11, Mk 10:2-16

Dear Sisters, Brothers and Children, I welcome you to this new week, where we are called to reflect and pray for respect for life. God is the author of our life; birth and death are in the hands of God. Beginning of a new life is the message that God loves the humanity, dying of a person is the message that God calls that person to be in union with Him in His kingdom. Our participation and celebration of the Eucharist may create awareness for the respect for human life and to thank God who is the author and the source of life. We shall also renew our life called to in the family in particular as married couple to live as one.

Someone said Marriage is a three ring-circus: when I asked what are they? the person said, they are engagement ring, wedding ring and suffering.
In a party, one woman said to another, don’t you think you are wearing your wedding ring in the wrong finger? The other replied, “Yes, I am, I know it, it is to show that I married a wrong man”.

The couples were celebrating their 50 years of golden jubilee of their wedding anniversary. They were asked about their success of their fifty years of togetherness. Husband said, the first fifteen years of our marriage she was talking I was listening, the next fifteen years of our wedding I did the talk she did the listening, in the last twenty years we both do the talk but none of us listen because we have hearing impaired machine.

I am not ready to listen to you. You have brought suffering into my life. You are the wrong person in my life. When we say such statements, we see the dichotomy in our thinking, in our attitude and in our approach to the other person in the family. This way, we go against our marriage commitment and vow.  The divorce statistics show that in the last three years, the divorce rate in U.S has gone above 43%, although it is still less than other countries, Russia 65%, Sweden63%, U.K49% and Australia49%. In 1998 the number of the divorced adults in U.S were19.4million but each year 2.5million more couples gets divorced. A greater number of divorces occur within the Christian churches than in marriages made outside the Church.

Today’s readings invite us to renew the call to that oneness of life. In the first reading from Genesis gives the message and the mind of God, although polygamy, that is one man with many wives, and divorce were widely practiced not alone among pagan neighbors but also among the Israelites themselves. When the Yahwistic writer composed this source of Genesis, the author courageously expressed the will and intention of God in this regard. Man and woman are created for one another, and he explains this in two symbols, flesh and bones.  

The woman is made of the rib of man, so she becomes bone of his bone and flesh of his flesh, here the author gives a poetic description of the creation of woman---the details are added to stress not only that woman is equal to man, as was none of the other creatures, but that she is actually a part of him. So, there is meaning in calling as my better half, my sweet heart, my inner most self, etc. figuratively bone, stands for strength and flesh stands for weakness. So called to be one at all times, that’s why at the time of marriage vow we have the words,  I promise to be true to you in good times and in bad, in sickness and in health. I will love you and honor you all the days of my life. They will become one, refers the bond of complementarity. Here the respect for each other and love for one another should flow and grow in their daily life and activities. When the respect for other is less and love for the other is diminishing then, we begin to see dualism instead of the oneness of life and call. We see that in the Gospel.

Jews in practice man has right to divorce wife without any reason, but woman never except few grave reasons like if a man got leprosy, if a man commits murder or if a man has some business with pig then woman were allowed to divorce, it was very rare, So to question this discrepancy and to know the view of Jesus. Jesus says, Moses’s permission for divorce was only a temporary concession to control the growing rate of divorce even in his time by introducing law governing divorce. So Jesus taught strongly emphasizing the permanency in married life as one. We see in CCC 2384, 2385 “Divorce introduces disorder in to the family and into society. This disorder brings grave harm to the deserted spouse and to children traumatized by the separation of their parents”.

We are called to reflect on respect for life on this Sunday, respect for the other and love for the other in the married life should be expressed, both respect and love cannot be sufficiently expressed ever, it should be part of life that alone will sustain the oneness of the marries life. This respect and love will be there only we have genuine respect for life, that is God alone is the author of life, the birth and the death are in his hands, we don’t have authority over these great two moments. We need to respect and protect all forms of human life from conception to natural death; we need to work and pray vigorously to end the culture of death. Abortion harms women physically, emotionally, psychologically, socially and spiritually. 93% of the abortions in America are for convenience. The mother's health is an issue only 3% of the time, and the baby's health is an issue 3% of the time. Rape or incest are issues only 1% of the time. Ninety-three percent of all abortions in America are performed because of selfishness, just because someone doesn't want a child

This week mark two special events, 1) the remembrance of the beginning of the great Vatican Council II fifty years ago(the bishops from all over the world will meet in Rome for the historical synod) 2) the beginning of the year of faith on11Oct. These moments and events continue to strengthen our faith and our respect for human life from womb to tomb.

It takes three to make Love in Heaven--
Father, Son, and Holy Spirit.
It takes three for Heaven to make love to earth—
God, Man, and Mary, through whom God became Man.
It takes three to make love in the Holy Family--
Mary, and Joseph, and the consummation of their love, Jesus.
It takes three to make love in hearts--
The Lover, the Beloved, and Love. -Amen.

 

text