அன்பைக் கொண்டாடுவோம் இறை அன்பில் ஒன்றாகுவோம்

download

0012. அன்பைக் கொண்டாடுவோம் இறை அன்பில் ஒன்றாகுவோம்
இந்த உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய
பண்போடு நாம் வாழுவோம் நிறைவாழ்வை நாம் காணுவோம்(2)

1. பகைமை உணர்வுகளை நாம் களைந்து
பாசத்தைப் பொழிந்தே வாழுவோம் (2)
வேற்றுமை நிலைகளை மதித்திங்கு
ஒற்றுமையுடனே பழகுவோம்
அன்பிற்கு இலக்கணமாகிடவே
அன்றாடம் உறவுகள் வளர்ந்திடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்

2. பாகுபாடுகளை நாம் வெறுத்து
பகிர்விலே சமத்துவம் காணுவோம் (2)
பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு
பிறரையும் நேசிக்கத் துவங்குவோம்
உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே - ஒன்று சேர்வோம்.....