அப்பா பிதாவே அன்பான தேவா

download

0875. அப்பா பிதாவே அன்பான தேவா
அருமை இரட்சகரே ஆவியானவரே (2)

1. எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன்
என் நேசர் தேடி வந்தீர்
நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து
நிழலாய் மாறி விட்டீர் (2) - நன்றி உமக்கு நன்றி (ஐயா)-2

2. தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன்
தயவாய் நினைவு கூர்ந்தீர்
கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து
கரம் பற்றி நடத்துகிறீர் (2) - நன்றி உமக்கு நன்றி (ஐயா) -2

3. உளையான சேற்றில் வாழ்ந்த என்னைத் தூக்கி எடுத்தீரே
கல்வாரி இரத்தம் எனக்காகச் சிந்தி கழுவி அணைத்தீரே (2)
நன்றி உமக்கு நன்றி (ஐயா) -2