அன்பின் தேவநற்கருணையிலே

download

0927. அன்பின் தேவநற்கருணையிலே
அழியாப் புகழோடு வாழ்பவரே
அன்புப் பாதையில் வழிநடந்தே
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர்

1. அற்புதமாக எமைப் படைத்தீர்
தற்பரன் நீரே எமை மீட்டீர்
பொற்புடன் அப்பரச குணத்தில்
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்
எத்தனை வழிகளில் உமதன்பை
எண்பித்தெமை நீ ஆட்கொண்டீர்

2. கல்வாரி மலையின் சிகரமதில்
கனிவுடன் தினம் எமை நிலை நிறுத்தும்
நற்கருணை விசுவாசமதில்
நம்பிக்கையூட்டி வளத்திடுவீர்
இளமையின் பொழிவால் திகழ் திருச்சபையும்
யாவரும் வாழத் தயை புரிவீர்