0561. அழகிய கவிதையில் பாடிடுவேன்
அவனியில் அவர் புகழ் சாற்றிடுவேன்
1. அறிவிலி எனையே அவர் நினைத்தார்
ஆற்றல் மிகவே எனக்களித்தார்
எதிரியினின்று விடுவித்தார்
எனவே அவர் என் ஆண்டவரே
2. துன்பச் சூழல்கள் சூழ்கையிலே
துயரக் கறைகள் படர்கையிலே
அன்பின் கரத்தால் அரவணைத்தார்
ஆகவே அவர் என் ஆண்டவரே
3. யாழில் நான் ஒரு இசை மீட்டி
யாகமென ஒரு பாடலிலே
இருளிலிருந்து மீட்டதற்கு
என்றும் நன்றி பாடிடுவேன்
|