அடைக்கலம் தருகின்ற நாயகனே

download

0618. அடைக்கலம் தருகின்ற நாயகனே
அருள்மழை பொழிகின்ற தூயவனே
அடைக்கலம் எனக்கு நீயல்லவோ
அன்புக்கு நீயொரு தாயல்லவோ

1. தெய்வீக நீதியின் கதிரவனே
தீமைகள் போக்கும் காவலனே
ஏழையின் கண்களைப் பாராயோ
என்னென்ன கவலைகள் தீராயோ

2. அருள் ஒளி உண்டு உன் விழியினிலே
ஆறுதல் உண்டு உன் மொழியினிலே
பெருந்துயர் காப்பதுன் கரமல்லவோ
பிறந்தே நான் வாழ்வதுன் வரமல்லவோ

3. அணையாத விளக்கு எரிவதனால்
அன்பரின் உள்ளம் தெரிவதனால்
இறைவனே எனது துணை என்று
இதயத்தில் நினைத்தேன் நான் இன்று