மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும்

download

0895. மாதாவே துணை நீரே உம்மை வாழ்த்திப் போற்ற வரந்தாரும்
இதோ பிள்ளைகள் வந்தோம் அம்மா
ஏற்றன்பாக எமைப் பாரும்

1. வானோர் தம்மரசே தாயே எம்
மன்றாட்டைத் தயவாய் கேளும்
ஈனோர் என்றெம்மை நீர் தள்ளாமல்
எக்காலத்துமே தற்காரும்

2. ஒன்றே கேட்டிடுவோம் தாயே யாம்
ஓர் சாவான பாவந்தானும்
என்றேனும் செய்திடாமற் காத்து
எம்மை சுத்தர்களாய் பேணும்

3. பன்னீர் தாரகை மின்னிச் சூழும்
சென்னித் தாயாரே எந்நாளும்
பொன் நேர் கற்பினை எண்ணிக் காவல்
பண்ணத் தேவருள் தந்தருளும்

4. வாசஞ் சேர் திரு ரோசாப் பூவே
மாசொன்றின்றிய தாயாரே
சேசின் மேல் அடியோர் மென்மேலும்
நேசங் கொள்ள நீர் செய்வீரே

5. தஞ்சம் நீர் என வந்தோர் தம்மைத்
தள்ளத்தான் அறியீராமே
மிஞ்சும் வல்லமை மேவுந் தாயே
வேறாரோ துணை நீர் தாமே