அழகாய் நிற்கும் யார் இவர்கள்

download

0924. அழகாய் நிற்கும் யார் இவர்கள்
திரளாய் நிற்கும் யார் இவர்கள்
சேனைத் தலைவராம் இயேசுவின் போர்களத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்

1. ஒரு தாலந்தோ இரண்டு தாலந்தோ
ஐந்து தாலந்தோ உபயோகித்தோர்
சிறிதானதோ பெரிதானதோ
பெற்ற பணி செய்து முடித்தோர்

2. காடு மேடு கடந்து சென்று
கர்த்தர் அன்பை பகிர்ந்தவர்கள்
உயர்வினிலும் தாழ்வினிலும்
ஊக்கமாக ஜெபித்தவர்கள்

3. தனிமையிலும் வறுமையிலும்
இலாசர் போன்று நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள்

4. எல்லா சாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின்கீழ் இயேசு இரத்தத்தால்
சீர்போராட்டம் செய்து முடித்தோர்

5. வெள்ளை அங்கியை தரித்துக் கொண்டு
வெள்ளை குருத்தாம் ஓலைப் பிடித்து
ஆர்ப்பரிப்பார் சிங்காசனமுன்
ஆட்டுக்குட்டிக்கே மகிமை என்று

6. இனி இவர்கள் பசி அடையார்
இனி இவர்கள் தாகம் அடையார்
வெயிலாகிலும் அனலாகிலும்
வேதனையை அளிப்பதில்லை

7. ஆட்டுகுட்டிதான் இவர் கண்ணீரை
ஆறஅகற்றி துடைதிடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றிற்கு
அள்ளிப்பருக இயேசுதாமே