0998. நிறைமிகு அமைதியில் சேர்ந்திடுவாய்
நீடித்த ஒளியில் வாழ்ந்திடுவாய்
1. இறைவனில் இறப்போர் பேறுபெற்றோர் - இனி
இவருக்கு மீண்டும் உழைப்பில்லையே
ஆற்றிய நன்மைகள் பின்தொடர - இளைப்
பாற்றியை அவர்கள் கண்டிடுவார்
2. சாவே உனது கொடுக்கெங்கே - எனச்
சாற்றும் பறைகள் அதிர்ந்திடுமே
உயிர்ப்பின் எக்காளம் ஒலித்தங்கே - இவ்
உலகோர் தம்மை எழுப்பிடுமே
3. விண்ணக விருந்தின் முன்சுவையே - இங்கு
மண்ணிலே நுகர்ந்திட விரைந்திடுவோம்
எண்ணிலா புனிதர் கூட்டத்திலே - அங்கு
கண்ணீரும் சாவும் மறைந்திடுமே
|