இரக்கத்தின் ஆண்டவரே இயேசுவே

download

1010. இரக்கத்தின் ஆண்டவரே இயேசுவே
என் மீது மனமிரங்கும்
உம்மை நம்பினேன் உம்மை நம்பினேன்
என்னைக் கைவிட்டு விடாதேயும்

1. உமது இரத்தம் எனக்காக
சிலுவையில் சிந்தி பலியானீர்
வற்றா ஊருணி நீருற்றே
வறண்ட என் உள்ளம் நனைத்தருளும்

2. உமது உதவி இல்லாமல்
என் பாரம் சுமக்க இயலாதய்யா
என் நோய்கள் சுமந்து பலியானீர்
என் துயர் துடைத்துக் காத்தருளும்

3. உமது இரக்கம் இல்லாமல்
இறப்பவர் இருக்கக் கூடாதய்யா
அவர்களின் அழுகுரல் கேட்டென்றும்
அவர்களை உம் அடி சேர்த்தருளும்

4. உமது இரக்கத்தைத் தேடி வரும்
ஆன்மாக்கள் அருளைப் பெறுவார்கள்
பாவிகள் பாவத்தால் அழிந்தாலும்
பாசத்தால் மீட்கும் ஆயன் நீரே