அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்

download

1055. அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம்

1. பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளிலெல்லாம்

2. பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே

3. என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
அன்பில்லையானால் அதிற்பயனில்லை

4. துணிவுடனுடலைச் சுடக்கொடுத்தாலும்
பணிய வன்பிலாற் பயனதிலில்லை

5. சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள

6. புகழிறுமாப்பு பொழிவு பொறாமை
பகையநியாயப் பாவமுஞ் செய்யா

7. சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை தராது

8. சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைப்பட வென்றும் மேன்மை பெற்றோங்கும்