1146. அப்பத்தின் வீடெனும் பெத்தலையில்
ஆயன் பிறந்த நாள் தனில்
அப்பமும் இரசமும் நான் கொணர்ந்தேன்
ஆண்டவன் உடலாய் மாறிடுமே
1. இடையினில் பிடித்த மணிகளைக் கொணர்ந்த
இடையர்கள் போலாவேன்
நடை பல நடந்து பொன் பொருள் கொடுத்த
ஞானியர் நானாவேன்
வானவர் செய்தி நான் கேட்டேன்
வாழ்வினில் அமைதி நான் கொள்வேன்
விண்மீன் என்னை வழிநடத்தும்
விளக்காய் பிறர்க்கு ஒளி கொடுப்பேன்
2. கைகளில் பிறந்து எருசலேம் நுழைந்து
பின்னாளில் மடிந்திடுவார்
பிறந்ததன் பயனை இறந்ததால் காட்டிய
பரமனை நான் தொடர்வேன்
|