நன்றி நன்றி... ...

as

இந்த இணையத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கத்தோலிக்க (பொது) விவிலியத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு உரிமம், தமிழக கத்தோலிக்க ஆயர்களின் வழிநடத்துதலில், திண்டிவனத்தில் இயங்கிவரும் தமிழ் நாடு விவிலிய - மறைக்கல்வி - திருவழிபாட்டு நடுநிலையத்திற்கு (TNBCLC, Tindivanam, Tamil Nadu, India) உரியது. அவர்களுக்கு எமது நன்றி.

இந்த இணையத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள 'பொது விவிலியம்' எழுத்துப் பதிவிற்கு பெரிதும் உதவியது டோன் போஸ்கோவின் சலேசிய சபையைச் சார்ந்த அருட்திரு அடைக்கல இராசா அவர்களின் 'அருள்வாக்கு' மென் தகடு. அவர்களுக்கும் எமது நன்றி.

இந்த இணையத்தளத்தின் கிங்ஜேம்ஸ் தமிழ் மொழிபெயர்ப்பு பதிவு www.tamilbible.net இணையத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தள உரிமையாளர் பாஸ்டர் நகுல்ஸ் கந்தசாமி அவர்களுக்கு நன்றி

இந்த இணையத்தளத்தின் திருவிவிலியம் பொது மொழிபெயர்ப்பு எழுத்துப் பதிவின் பிழைகளைப் திருத்தித் தந்த அருட்திரு ஜோசப் லியோன் அவர்களுக்கும் எமது நன்றி.

'தமிழ் பைபிள் வரலாறு' ஆராய்ச்சிக் கட்டுரை, 'விவிலிய நூல்களின் கால அட்டவணை' ஆகியவைகளை எழுதி தந்து, மற்றும் 'இன்றைய சிந்தனை' பகுதியை எழுதித் தந்துகொண்டிருப்பவருமான அருட்திரு பால் லியோன் வறுவேல் அவர்களுக்கும் எமது நன்றி.

2009 ஜுனிலிருந்து இன்றய சிந்தனை எழுதித் தந்துகொண்டிருக்கும் அருட்திரு குமார் ராஜா அவர்களுக்கும் நன்றி.

இந்த இணையதளத்திற்கு அனேக பக்திப் பாடல்களை தந்த அருட்திரு டென்னிஸ் வாய்ஸ் அவர்களுக்கும் நன்றி.

திருவிவிலிய பாடங்களை எழுதித் தந்த அனைத்து முனைவர்கள், பேராசிரியர்கள், மறைமாவட்ட ஆயர் அனைவருக்கும் நன்றி.

இந்த இணையத்தளத்தின் திருவிவியம் பொது மொழிபெயர்ப்பு ஒலிவடிவம், பிரான்சிஸ்கன் சபை (அமலாசிரமம், திருச்சி) வெளியிட்ட 'ஒலியில் திருவிவிலியம்' இசைத் தகடிலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கும் எமது நன்றி.

இந்த இணையத்தளத்தில் பயன்படுத்தப்படும் கிங்ஜேம்ஸ் தமிழ் ஒலிவடிமானது வின்சென்ட் ஜார்ஜ் சகோதரர்களின் படைப்பில் Music Mindss, Gospel Media Communications தயாரித்த "ஆடியோ பைபிள்" ஒலித்தட்டிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நன்றி.

இந்த இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ”பைபிள் மென்பொருளை” ஆக்கித்தந்த திரு. இராஜா மரிய அந்தோணி அவர்களுக்கு நன்றி.

பரிசுத்த வேதாமம் - கத்தோலிக்க (பழைய) மொழிபெயர்ப்புபை வாசித்து ஒலிவடிவம் தந்த திரு. மா. தங்கையா (அண்ணாநகர், தூத்துக்குடி) அவர்களுக்கு நன்றி.

மற்றும் இந்த இணையத்தளம் அமைய ஆலோசனை, கருத்துக்கள், புத்தகங்கள், பாடல்களை தந்தவர்கள், பிழைதிருத்துதலில் உதவி, மற்றும் உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி.

-அருட்திரு மரியதாஸ் லிப்டன் ஜெபபுத்திரன்.

 

 

#################################

#######################

#############

#######

###

#