insert text here

 

திருப்பலியில்
வாசகங்கள் - மறையுரை

as

If you are a Catholic Priest and you are a good preacher and have access to computer and Internet
and interested in sharing your thoughts with the Tamil people around the world, please
contact me at my e-mail : dosmaria@yahoo.co.uk or phone 9884922266. Thank you.

கத்தோலிக்க கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை:

திருப்பலி கிறிஸ்தவ வாழ்வின் ஆதாரமும் கொடுமுடியுமாகும். அனைத்து மற்ற அருட்சாதனங்கள் இதோடு பிணைக்கப்பட்டுள்ளன. மற்ற திருவருட்சாதனங்களில் கடவுளின் கொடைகளை நாம் பெறுகிறோம். ஆனால் நற்கருணை என்னும் இத்திருவருட்சாதனத்தில் கடவுள் தம்மையே நமக்குத் தருகிறார்.

நற்கருணை என்னும் இத்திருவருட்சாதனம் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது; திருப்பலி, பலிப்பூசை, திருப்பலி கொண்டாட்டம், திருவழிபாடு. இத்திருப்பலி இரண்டு முக்கிய பகுதிகளை உள்ளடக்கியது

1. இறை வார்த்தை வழிபாடு

2. நற்கருணை வழிபாடு

இறை வார்தை வழிபாடு:
திருப்பலி வாசகங்களையும் (முதல் வாசகம், திருப்பாடல், இரண்டாம் வாசகம், வாழ்த்தொலி, நற்செய்தி) மறையுரையையும் வார்த்தை வழிபாட்டின் மையப்பகுதியாகக்கொள்ளலாம். உலகெங்கும் திருப்பலி என்ன மொழியில் நிறைவேற்றப்பட்டாலும் வாசங்கள் குறிப்பட்ட நாளுக்கு அதே பகுதிதான் உலகெங்கிலும் வாசிக்கப்படுகிறது.

வாசகங்கள் அமைக்கப்பட்டுள்ள முறை:
காலண்டர் ஆண்டு என்பது ஜனவரி 1ல் தொடங்கி டிசம்பர் 31ல் முடிவுபெறுகிறது. திருவழிபாடு ஆண்டு என்பது திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறு (பொதுவாக டிசம்பர் மாதத்தின் முதல் வருகின்ற ஞாயிறு) தொடங்கி கிறிஸ்தரசர் பெருவிழாவோடு (நவம்பர் கடைசி ஞாயிறு) நிறைவுபெறுகிறது. ஆக வொவ்வொறு ஆண்டும் தொடக்க நாள், நிறைவு நாள் மாறுபடுகிறது. இது அவ்வருட இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவைப் பொருத்து மாறுபடும். ஏன், எப்படி மாறுபடுகிறது? திருவழிபாடு ஆண்டு என்பது திருவருகைக் காலம் (4 வாரங்கள்), கிறிஸ்து பிறப்பு (2 வாரங்கள்), தவக்காலம் (5 வாரங்கள்), பாஸ்கா காலம் (7 வாரங்கள்), பொதுக் காலம் (34 வாரங்கள்) ஆகிய 52 வாரங்களை உள்ளடக்கியதாகும்.

ஞாயிற்றுக் கிழமைகளில் 3 சுற்றுகள் ( Cycle A, B, C ) கொண்ட வாசகங்கள் பயன்படுத்தப்படுகிறது. உதார்ணமாக 2011 ஆண்டு நாம் Cycle A பின்பற்றுகிறோம். இது கடந்த 2010 டிசம்பர் முதல்வாரத்தில் (திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு) இச்சுற்று ஆரம்பமாயிற்று. இந்தவருடம் 2011 நவம்பர் மாதம் 20 தேதியில் கிறிஸ்தரசர் பெருவிழாவோடு முடிவடைகிறது. அடுத்த வருடம் 2012ல் Cycle B பின்பற்றப்படும். 2013 Cycle C, 2014 A என்ற சுழற்சியில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொறு சுற்றிலும் முதல் வாசகம், தியானப்பாடல், இரண்டாம் வாசகம், நற்செய்தி வாசகங்கள் மாறுபடும்.

வார நாட்களில் இரண்டு சுற்றுகள் (வருடம் 1, வருடம் 2) கொண்ட வாசகங்கள் பயன்படுத்தப்படுகிறது. வார நாட்களுக்கு இரண்டு சுற்றுகளே இருப்பதால் ஒற்றைப்படை கொண்ட ஆண்டில் முதல் வருட சுற்றும் இரண்டைப்படை ஆண்டில் இரண்டாம் வருட சுற்றும் பயன்படுத்தப்படுகிறது. உதார்ணமாக 2011 ஒற்றைபடையாக இருப்பதால் முதல் ஆண்டுக்குள்ள வாசகங்களைத் தேர்வுசெய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் நற்செய்தி மாறாது. ஆனால் முதல் வாசகம் மற்றும் தியானப்பாடல் மாறுபடும்.

மறையுரை:
திருப்பலியில் வாசிக்கப்பட்ட வாசகங்களின் அடிப்படையில் மறையுரை அமைய திருச்சபை பரிந்துரைக்கிறது. வாசகங்களின் பின்னனி, விளக்கம், வாசகங்களின் மையக்கருத்து, வாசகங்கள் மூலம் கடவுள் நமக்குத் தரும் செய்தி, ஆகியவைகளை நமக்குத் தகுந்த முறையில் எடுத்தியம்ப மறையுரை ஒருசிறந்த கருவி. நம் அருள்வாழ்வில் வளர, தொடர்ந்து வாழ தேவையான ஆன்மீக உணவாக மறையுரை அமைகிறது.

இவ்விணையத் தளத்தில் தரப்படும் மறையுரைகள் இத்தகைய அருள் வாழ்வில் வளர உதவிசெய்யுமென்று நம்புகிறோம்.

 

text